பக்கம்:நாலும் இரண்டும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதமை என்பது கற்றும் அறியாத கயமை - உலகை விட்டு நீங்க வேண்டும். நீங்குமா? இன்று உலகில் நடக்கும் கொடுமைக்கெல்லாம் காரணம் கற்றவர்தாமே! எனவேதான் வள்ளுவர் நாடு வாழ - நானிலம் வாழ இப்பேதைமை நீங்க வேண்டும் என்ற கருத்தில், இக்குறள் வழி அதன் தன்மையை நன்கு விளக்கி * விட்டார். நாமும் அவர் குறளே காடொறும் கேட்பதன் பயனகப் பேதைமை நீங்கித் தெளிந்து, செய்வ தறிந்து, செயலாற்றி, நல்வழியினே மேற்கொண்டு நாட்டினையும் கானிலத்தையும் வாழ வைக்க முயல்வோமாக. 51