பக்கம்:நாலும் இரண்டும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலடியார் அறு சுவை 28-9–75 சமுதாய வாழ்வே இலக்கியங்களுக்கு நிலைக்களன்" அம்மொழியில் வாழும் இலக்கியங்களும் இந்த அடிப் படையிலேயே அமைகின்றன. எப்பொருளையும் இலக்கியம் சமுதாய அடிப்படையிலேயே காட்டுவது மரபு. கல்வி, அறம், அறிவு, தவம் எதுவாயினும் அவற்றின் அடிப் படைகள் யாவும் சமுதாயத்ைைத வாழ வைக்கும் குறிக் கோளிலேயே சென்று அமைகின்றன. இந்த உண்மை யினேயே தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்' என்றும், மனத்துக்கண் மாசில தைல் அனைத்து அறன்' என்றும், அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் என்றும், உற்றநோய் கோன்றல் உயிர்க் குறுகண் செய்யாமை அற்றே தவத்துக்கு உரு என்றும் வள்ளுவர் விளக்கிக் காட்டியுள்ளார், ஆம்! அத்தகைய வள்ளுவர் தம் குறளொற்றி வந்த காலடி. நானூறும் அந்த அடிப்படையிலேயே சமுதாய வாழ்வை ஒட்டிச் செல்லுகின்றது. கடந்த 1330 நாட்களிலும் குறளின் வாழ்வியலேக் கண்டு, கேட்டு, இன்புற்ற, நீங்கள் இன்று முதல் நானூறு நாட்களுக்கு நாலடி காட்டும் சமுதாய நெறியைக் காண இருக்கின்றீர்கள். காலடியின் முதற் பாடலே மக்கள் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மையைச் சுட்டிக் காட்டுகின்றது, உலகவாழ்வுக்கு இன்றியமையாதது செல்வம். அப் பொரு 52.