பக்கம்:நாலும் இரண்டும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறு சுவை ளான் கலம் கண்டு காதன் மனையாளுடன் தனக் கெனவும் உலகுக் கெனவும் வளமார் இல்லற வாழ்வினை நடத்துவதே சமுதாய வாழ்வில் முன்னிற்பது. சில செல்வர்கள் இந்த அடிப்படை உண்மையினே மறந்து விடுகின்றனர். தம் முடைய நேற்றைய கிலேயினையும் தம்மினும் செல்வத்தின் மிக்காரா யிருந்தார் கண்முன்னே கிலே கெட்டு நலிந்த நிலை யினையும் கண்டும் கேட்டும், சிலர் தாம் என்றும் செல்வராய் வாழ்வோம்' என்று தருக்கி, உலகில் பல கொடுமைகளைச் செய்கின்றனர். இவ்வுண்மை வெறும் பொருட் செல்வத் தினுக்கு மட்டும் பொருந்தாது, பிற அனைத்துக்கும்-கல்வி. அதிகாரம், பதவி, பட்டம், அரசியல், பிற சமுதாய அடிப் படைகள் அனைத்துக்கும் பொருந்தும். எனினும், ஒரு சில நாட்களே வாழும் இந்த மனித வாழ்வுக் கிடையில்- சிறிது காலமே பெற்ற இச் செல்வத்தைக் கொண்டு செய்வன செய்து சமுதாயத்தைச் செம்மைப்படுத்த நினைக்காத சிலர், அச் செல்வத்தால் சமுதாயத்தை அழித்து நசுக்கும் கொடுமைகளைச் செய்ய முற்படுகின்றனர். ஆனல் உலக வரலாறு அவ்வாறு முயல்வார்தம் முடிவு என்னுகிறது என் பதைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. இலக் கியமும் இந்த உண்மையை என்றும் வாழும் நிலையில் சுட்டிக் காட்டுகிறது. நாலடியாரின் முதல் அதிகாரம் செல்வ கிலேயாமை. இவ்வதிகாரத்தின் பத்துப் பாடல்களும் செல்வம் கிலேயா அவல நிலையினே எடுத்து விளக்கி, அதல்ை மனிதன் மனிதனுக வாழவேண்டிய உண்மை கிலையினை எடுத்துக் காட்டுகின்றன. அதன் முதல் பாட்டு, அச் செல்வத்தினையும் அதனல் பெறும் வளமார் இல்லறத்தினேயும் சுட்டிக் காட்டி, அச் செல்வத்தில் புரளுவோர் கிலே தடுமாறிக் கெடுங் காலத்தில் 53 4