பக்கம்:நாலும் இரண்டும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் அன்ருட உணவுக்கும் கூழுக்கும் பிறரிடம் கையேந்தி கிற்கும் காட்சியினையும் படம் பிடித்துக் காட்டி, இந்த நிலை யில் நிலையாச் செல்வத்தைப் பெற்ற ஒவ்வொருவரும் பெற்ற செல்வத்தால் தாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழவைக்க வேண்டும் என்ற உண்மையினை உணர்த்துகின்றது. இதோ அந்தப் பாட்டு: அறுசுவை உண்டி அமர்ந்துஇல்லா ளுட்ட மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச் சென்றிரட்பர் ஓரிடத்தில் கூழெனில் செல்வமொன் றுண்டாக வைக்கப்பாற் றன்று ' (நாலடி 1) இதல்ை ஆசிரியர் இல்லற வாழ்வில் இல்லாள் வழியே பெறும் இன்ப வாழ்வினைச் சுட்டி, அதற்கு மூலமான செல்லத்தையும் காட்டி, அத்தகைய பெருஞ்செல்வமும் நிலை கெடும் என்பதை உண்டாக வைக்கப்பாற் றன்று என உணர்த்தி, ஆகவே பெற்ற செல்வத்துறு பயன் கைத் துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்தல்' என்பதையும் வற்புறுத்துகின்ருர். ஆம்! இன்றைய நம் பாரத நாடும் அதன் அரசாங்கமும் இந்த உண்மையினேயே சட்டங்கள் மூலம் வற்புறுத்துகின்றன. இதை இன்னும் நம் நாட்டுச் செல்வரும் உலகத்தவரும் உணரவில்லை. உணர்ந்தால் நாடு நாடாகும்; மனிதன் மனிதனுக வாழ்வான். செல்வர் இந்த நாலடியின் வழியே மனம் திருந்தி, செம்மை நெறியில் வையம் வாழ - அதன் சமுதாயம் வாழ, செல்வத்தை வாரி வழங்கி, உலகை வாழ்வித்துத் தம்மையும் புகழால் என்றும் வாழ வைத்துக் கொள்வார்களாக! 54