பக்கம்:நாலும் இரண்டும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துகள் தீர் 29–9–75 உலக வாழ்வில் மக்கள் பெறும் செல்வம் கிலேயற்ற ஒன்று என்பதை யாவரும் அறிவர்; சிலர் உணர்வர்; சிலர் தெளிந்து செயலாற்றுவர். ஆயினும் சிலர் என்றென்றும் அச்செல்வமும் செல்வாக்கும் தமக்கு இருக்கும் என்று எண்ணிக் கொடுமைகள் இழைப்பர். அதே வேளையில் சிலர் இந்த கிலேயாத செல்வத்தின் தன்மையைக் காட்டி, "இச் செல்வத்தையும் அது அழியும் வாழ்வையும் விட்டு ஒட வேண்டும் என்று துறவு நெறியைக் காட்டுவர். இவை இரண்டும் மனித சமுதாயத்துக்கு ஏற்றவை அல்ல என்ப தையும் நிலையாச் செல்வத்தைப் பெற்றவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் காலடியார் நன்கு வற்புறுத்து கின்றது. - பெரும் பொருள் திரட்டும் செல்வரைக் கூப்பிட்டு அரசாங்கம், உங்கள் தேவைக்குமேல் உள்ளவற்றுள் ஒரு பகுதியை வரியாகத் தாருங்கள். அதைக் கொண்டு உங்களுக்கும் சமுதாயத்தில் தாழ்ந்த கிலேயில் உள்ளவர் களுக்கும் ஆக்க வழிகளே அமைக்கப்போகிருேம் எனக் கேட்கிறது. ஆயினும் பலர் அந்த வேண்டுகோளை ஏற்காத காரணத்தினலேயே அவசரச் சட்டங்கள் அமுலாக்கப்படு கின்றன. செல்வம் பெற்றவர் தாமே முன்வந்து பெற்ற செல்வத்தை மற்றவரோடு பகிர்ந்து உண்ணப் பழகுவார் களானல் காட்டில் எந்தக் கொடுமையும் இருக்க வழி இல்லை. அரராங்கமும் அவசரச் சட்டங்களைப் புகுத்தாது. சாதாரணச் செல்வராயினும்-அளவோடு வளம் பெற்ற வாயினும் தம் வாழ்க்கைக்கே வரவு போதவில்லை என 55"