பக்கம்:நாலும் இரண்டும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலும் இரண்டும் வாதிடலாம். அத்தகையோருக்கு அரசாங்கமே வரி விலக்கு அளிக்கிறது. ஆனல் பெருஞ்செல்வர் நிலை? அத்தகைய பெருஞ்செல்வரை அழைத்துத்தான் காலடியார் அறம் உரைக்கின்றது. பெருஞ் செல்வம் பெற்ற மனிதா கின்று நினைத்துப் பார். நீ பெற்ற செல்வம் சக்கரத் தின் கால் போன்றது. நாளையே நீ ஏழையாகலாம். எனவே பெரும் பொருள் பெற்ற இக்காலத்திலேயே அச்செல்வத்தை மற்றவரோடு பகிர்ந்து கொண்டு, அப்பல்லாரோடு உண்டு வாழ். அது உனக்கும் நன்மை, உலகுக்கும் நன்மை என்று சமுதாய வாழ்வின் அடிப்படையை வற்புறுத்துகின்றது. இதோ அந்த காலடி " துகள் தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டும் பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க அகடுற யார்மாட்டும் கில்லாது செல்வம் சகடக்கால் போல வரும் ' (நாலடி-2) . 〜 'பல்லாரோடு உண்க என ஆணையிடுகின்ருர் ஆசிரியர்: 'இல்லையானல் என்னகும்?' என்ற வினவிற்கு விடையைச் சற்றே வன்மையாக அடுத்த பாடலில் சொல்லுவார். அதை காளை காண்போம். இங்கே செல்வம் சகடக்கால் போல வரும் என்று அதன் கிலேயினையும் 'அக டுற' என்று அதன் பொதுத் தன்மையினையும்-வேறுபா டற்று யாரிடத்தும் ஒத்த நிலையில் இருந்தும் பிரிந்தும் செல்லும் தன்மையினையும் சுட்டிக் காட்டி, ஆகவே பல்லாரோடு உண்க' என்கின்ருர். ஆம்! இந்த எச்சரிக்கையாம் அவசரச்சட்டநிலைக்கு முற்பட்ட பதட்ட நிலையினைக் கேட்டு வாழாவிட்டால் நாளே நம்மிடம் இல்லை என்பதை அந்த அவசரச் சட்டங்கள் அறிவிக்கும். 56.