பக்கம்:நாலும் இரண்டும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானை எருத்தம் பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க என்பதில் ஆசிரியர் இருபொருள்பட வைக்கிருர். பகடு என்பதற்கு மாடு என்ற பொருள் கொண்டு, உழவால் பெற்ற கூழாம் உணவினைப் பலரோடு உண்க எள்கின்ருர். பகடு என்ப தற்கு யானே என்றும் பொருள் கொண்டு, யானையெருத்தம் பொலியும் ஆளும் நிலையில் கொண்ட பெருஞ் செல்வத்தை யும் அதன் வழிப்பெறும் கூழாம் உணவினையும் பல்லாரோடு உண்க.எனவும் காட்டுகிருர். எனவே எந்த வகையில் பெரும் பொருள் பெற்ருலும், பெற்ற - பொருளே மற்ருரொடு பகிர்ந்து தாமும் உண்டு வாழ்வதுவே சமுதாய நெறி என் பதை காலடியார் உணர்த்துகின்றது. செல்வம் கிலேயாதது; அதை விடுத்துக் காடு செல்க' என்று துறவை வற்புறுத்தாது, அவ்வுருண்டோடும் செல்வத்தால் உலகை உய்விக்கும் உயரிய சமுதாய நெறியைக் காட்டுகிருர் சமண முனிவர். ஆம்! இந்த உண்மையினே இன்றும் உலகம் உணராத காரணத்தாலேயே நாடும் உலகமும் நலிவுறுகின்றன. அவசரச் சட்டங்கள் உண்டாகின்றன. நல்லவரும் வல்ல வரும் செல்வரும் செல்வாக்கு உள்ளவரும் நாலடியாரைப் பின்பற்றும் வகையில், பெற்ற செல்வத்தால் ஆவன செய்யின் நாடு நாடாகும்; உலகம் உய்யும். நம் நாடு இன்று அந்த நல்ல நெறியை நோக்கிச் செல்ல முயல்கிறது. வெற்றி பெற்று அந்த நெறி வழி நாடும் நானிலமும் சிறக்கும் என்ற உணர்வில் மகிழ்வோமாக! யானை எருத்தம் 30–3–75 . மக்கள் பல்வேறு வளங்களைப் பெற்று வாழ்கின்றனர். அவற்றுள் பொருட் செல்வ வளம் ஒன்று-தலையாயது. 57