பக்கம்:நாலும் இரண்டும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் பொருளாலும் அதன் வழியே பெறும் பிற வளங்களாலும் வாழ்கின்ற மக்கள், எப்படி வாழ வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கக் கடமைப் பட்டவராவர். அவ்வாறு எண்ணின் பல நல்ல உண்மைகள் புலனுகும். அந்த உண்மை களே உணர்ந்த நல்லவர், சென்ற காலத்தையும் எதிர்காலத் தையும் எண்ணி, தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தை கோக்கி, தம் வாழ்வும் வளமும் வையத்தை வாழவைப்பதற் கென்பதை உணர்ந்து செயலாற்றுவர். அதனல் வையமும் சிறக்கும்; சமுதாய வாழ்வும் செழிக்கும். ஆயினும் பலர் தாம் பெற்ற செல்வம், செல்வாக்கு, அரசியல் வாழ்வு ஆகிய வற்றைத் தம்மையும் தம்மைச் சார்ந்தாரையும் வளர்த்துக் கொள்ளவும் பிற தன்னலச் செயல்களுக்கும் பயன் படுத்துவர். அதேைலயே உலகில் எண்ணற்ற கொடுமைகள் நிகழ்கின்றன. - இத்தகைய கொடுமையாளர்களே உலக வரலாறு எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களில் உலகில் கம்மைச் சுற்றி நடைபெறுகின்ற-நடைபெற்ற நிகழ்ச்சிகள் உள்ளத்தை நடுங்க வைக்கின்றன. நேற்று ஆட்சியில் அமர்ந்து ஆண செலுத்தியவர் இன்று சிறையில் தள்ளப் பெறுகின்ருர், நாடு கடத்தப்பெறுகிருர் ஏன்?குடும்பத்துடன் கொல்லவும் படுகிருர். இவற்ருலெல்லாம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் ஒன்றே யாகும். ஆம்! மனிதன் மனிதனுக வாழவில்லை என்பதே! செல்வம் பெற்ற காலே அச்செல்வத்தை மற்றவரோடு பகிர்ந்து வாழின் நாட்டின் நலம் பெருகும் என்ற உண்மை யினே-மனித வாழ்வின் அடிப்படையை-நாலடியார் கன்கு சுட்டிக் காட்டுகின்றது. ஆயினும் வல்லவராகக் கருதிக் கொள்ளும் சிலர் அந்த அறிவுரையை ஏற்க மறுத்தபோது 58