பக்கம்:நாலும் இரண்டும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானை எருத்தம் அதல்ை விளையும் தீமையினையும் அது சுட்டிக்காட்டு கின்றது. ஆம் கொடுமைகளி லெல்லாம் கொடுமை தன் மனையாள மாற்ருன் கொண்டு செல்வதாகும். கற்பு நெறி யினைக் கண்ணெனப் போற்றிய தமிழ்ச் சமுதாயம் இதைக் கொடுமையாகக் கருதியது வியப்பில்லே யல்லவா இந்த உண்மையினேயே நாலடியார், " யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்ருேரும்-ஏனை வினைஉலப்ப வேருகி வீழ்வர் தாம்கொண்ட மனையாளை மாற்ருள் கொள் ” (நாலடி-3) என்று எடுத்துக் காட்டுகின்றது. யானே எருத்தத்து அமர்ந்து குடை நிழலில் பவனி வருதல் அன்றைய அரச வாழ்வின் சின்னமாகக் கருதப்பட்டது. அவர்கள் சேனேத் தலைவராகத் திகழ்ந்தார்கள்; அடக்கி ஆண்டார்கள். சேனைத் தலைவர் சிலர் தம்முடைய செல்வ ஆட்சியிலே, தம்மை மறந்த நிலையில் தவறு இழைத்துச் சமுதாயத்தை நசுக்கத் திட்டமிட்டுச் செயலாற்றினர்-செயலாற்றுகின் றனர். அவர்களே எச்சரிக்கிருர் சமண முனிவர். இந்த எச்சரிக்கை அன்று மட்டு மன்றி இன்றும் வேண்டப்பெறு கின்றது. தலேவனே! நில்! நினைத்துப்பார்! உன் வினே உலந்தால் தூக்கி எறியப்படுவாய்! உன் அழகிய மனேவி மாற்ருனுக்கு அடிமையாவாள்' என்று சுட்டிக் காட்டுகிருர் சமண முனிவர். வினே என்ற சொல்லுக்கு அவனுக்கு மக்களாலோ அன்றி மரபு நிலையாலோ அளிக்கப் பெற்ற உயர்நிலைதரும் செயல் என்ற பொருளும் உண்டு; அவனு டைய மாறுபட்ட செயல் என்ற பொருளும் உண்டு; அவனு டைய ஊழ் என்ற பொருளும் உண்டு. எப்படி யாயினும் பொருளாலும் பிறவற்ருலும் தருக்கி ஆளும் தகவிலார் 59