பக்கம்:நாலும் இரண்டும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்க முடைமை 27.8-71 மனிதன் வாழப் பிறந்தவன். அவன் வாழ்வே உலகை கேரிய வழியில் அழைத்துச் செல்வது. எனவே அவன் வாழ்வு செம்மையாக இருப்பின் உலகம் செம்மை நெறியில் செல்வதாக அமையும். இதையே எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி கல்லே வாழிய நிலனே' என்றனர் பழம் புலவர். வள்ளுவர் இத்தகைய அறத்தாறு வாழும் வாழ்க்கை நெறி செம்மையாக நடைபெற வழி வகுத்தவர். மனிதன் வாழ்வில் வழுக்கி விழும் காலத்து ஊன்றுகோலாக அமைவது திருக்குறளாகும். இக்குறள் 133 அதிகாரங் களைக் கொண்டது. அவற்றுள் அடக்கமுடைமையும் ஒன்று. தான் அடங்கத் தன் குலம் விளங்க' என்பது பழ மொழி. தனி மனிதனே அல்லது சமுதாயமோ அடங்கா நிலையில்தான் உலகில் பல கொடுமைகளும் பெரும் போர் களும் நிகழ்கின்றன. அடக்கம் மக்கள் வாழ்வில் மலரின், நாட்டிலும் உலகிலும் பல கொடுமைகள் இல்லாது ஒழியும். ஒரு சிலர் தம்மைப் பற்றி அறியாது, அடங்காது அல்லாத செயல்களைச் செய்வதாலேயே தனிமனிதப் போராட்டம், சமுதாயப் போராட்டம், போர் முதலியன நிகழ்கின்றன. வள்ளுவர் இவற்றை எண்ணியே அடக்கமுடைமையை நமக்கு நன்குணர்த்துகிருர். .