பக்கம்:நாலும் இரண்டும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை எனக் காட்டிய வள்ளுவர், அப்பொருள் அடக்கமே என்பதை, காக்க பொருளா அடக்கத்தை எனக் காட்டுவர். எனவே, உலகில் பொருளை விரும்புவர்-தம்மை ஒரு பொருளாக உலகத்தார் நினைக்க எண்ணுபவர் அடக்கத்தைக் காக்கக் கடமைப் பட்டவர். அவ்வாறு காத்தோம்பி வாழ்ந்த பெரியார் பலர் வரலாற்றில் போற்றப் பெறுகின்றனர். அவ்வரிசையில் இறுதியாக இடம் பெற்றவர் அண்ணல் காந்தி அடிகளார். வள்ளுவருக்கு ஒவ்வொருவரும் காந்தி போன்று வாழ வேண்டும் என்பது ஆசை. எனவேதான் இவர் இந்த அதிகாரத்தில் அடக்கம் அமரருள் உய்க்கும் எனவும், "சீர்மை பயக்கும் எனவும் அடக்கத்தால் இம்மை மறுமை இன்பங்கள் இரண்டையுமே பெறலாம் எனவும் சுட்டிக் காட்டுகின்ருர். உலகில் உயர்ந்துள்ள மலை போன்ற அடக்கம் உடை யாரால் எது வரினும் கலங்காது ஏற்றுக் காலத்தை வென்று வாழ முடியும் என்று வள்ளுவர் காட்டி, அம்மலை போல் யாருக்கும் வழிகாட்டியாகவும் அவர்கள் விளங்க முடியும் எனவும் சுட்டுகின்ருர். மேலும் அவ்வடக்கமாகிய பணிவு செல்வம் உடையவற்கே இன்றியமையாதது என்று சுட்டிக் காட்டவும் அவர் தவறவில்லை. அடக்கம் என்பதுதான் என்ன? மற்றவர் என்ன சொன்னலும் எதிர்த்துப் பேசாது தலைகுனிந்து ஏற்றுக் கொள்வதா? இல்லை. வள்ளுவர் அடக்கத்தை மூன்று வகையில் காட்டுவர். செயல், சொல். எண்ணம் மூன்றுமே மனிதனிடம் உள்ளவை, இம்மூன்றிடத்தும், அடக்கம் கொள்வதே மனித வாழ்வு என்பதை வள்ளுவர் காட்டு கிருர். தன் உறுப்புக்கள் அனைத்தையும் அடக்கும் ஆமை, 6. وجہ: