பக்கம்:நாலும் இரண்டும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்க முடைமை போல் நம் அடக்க உணர்வு செயலில் வெளிப்பட வேண்டும் என்பது அவர் கருத்து. ஆம் "ஐம்புல அடக்கமே உலக வாழ்வுக்கு இன்றியமையத தன்ருே கை நீட்டாதே' என்று சாதாரண மக்கள்கூட இன்றும் பேசுவது நம் காதில் விழும். கைப்ேடி ஒருவரை அடிக்காதே’ என்பது அதன் பொருள். பலருக்கு வாயடக்கம் இல்லாமையே இன்றைய உலகில் பல தீமைகளுக்கு வித்தாவதைக் காண்கிருேம். எனவே, வள்ளுவர் வாயடக்கத்தை, மூன்று குறட்பாக் களால் விளக்குகிரு.ர். உடல் அடக்கத்தினையும் மன அடக்கத் தினையும் ஒ வ் வொரு குறட்பாவினல் சொல்லியவர், 'நாவடக்கம் நல்கும் நன்மையினையும் அது இல்லாவிடின் நிகழும் கொடுமைகளையும் எண்ணி, மூன்று குறட்பாக்களை நமக்குத் தருகின்ருர். யாகாவாராயினும் காகாக்க என் கிருர், அதுவே எல்லாக் கொடுமைகளுக்கும் வித்தா கின்றமையின், - வாக்கால் வரும் குற்றத்தை அறிஞர்கள் பல வகையில் பிரிப்பர் பொய்யே, குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என நான்காகக் காட்டுவர் சாத்தனர். இத்தகைய கொடுமை பயக்கும் சொற்களில் ஒன்றை மனிதன் பயன் படுத்திலுைம், அம் மனிதன் ஆற்றும் பல நல்ல செயல்கள் பயனற்றனவாகக் கழியும். 'நல்லவன்தான் அவன்; ஆயினும் வாயால் கெடுகிருன் என்று உலகோர் பேசுவது கம் காதில் விழுகின்ற தன்ருே? வள்ளுவர் இந்த காவடக்கம் இல்லாவிடின், அது தரும் நிலைத்த கொடுமையினே மற்ருெரு விளக்கத்தின் வழியேயும் காட்டுவர். தீயில்ை சுடப்பட்ட புண் ஆறிவிடும்; புறத்தில் ஒருவேளை வடு மட்டும் தெரியும் உள்ளத்தில் அது பற்றி. 7.