பக்கம்:நாலும் இரண்டும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் ஒரு சிறு வடுவும் தெரியாது எனக் காட்டி, காவில்ை சுட்ட வடு என்றென்றும் ஆருது எனக் குறிக்கின்ருர். ஆம்! தீயில்ை சுட்டதைப் புண் என்றும், காவில்ை சுட்டதை "வடு என்றும், சொல்லேக் கொண்டு காட்டியே, நாவடக்கம் இன்மை என்றும் நீங்காக் கொடுமை இழைப்பதை உணர்த்துகிரு.ர். இறுதியாக இத்தகைய செயலாலும் சொல்லாலும் அடக்காது கொடுமை இழைப்பதற்கு அடிப்படைக் காரணம் மன அடக்கமின்மையே என்றும், மனத்தில் மூளும் சினமே பிற இருவகைக் கொடுமைகளுக்கும் காரணம் என்றும் வள்ளுவர் காட்டுகின்ருர். மனவடக்கமுற்று, மற்றவரோடு மாறுபட்டுச் சினங் கொள்ளாது வாழின் காவடக்கம் உடலடக்கம் இரண்டும் இயல்பாய் அமைந்து விடுமன்ருே! ஆம்! இவ்வாறு மனவடக்கம் பெற்ற நல்லவ. னிடம் அறச்செல்வி தானே வழி வினவிச் சென்றடைவாள் எனவும், அடையின் அவன் ஆக்கம் சிறக்கும் எனவும் வள்ளுவர் இறுதியாகச் சுட்டி, உலகில் அறம் பற்றி அடக்க முற்று வாழ்பவன் சிறந்து ஓங்குவதோடு, வையமும் நெறி யல்லா நெறியில் செல்லாது நேர்மை வழியில் சிறக்க வழி காட்டுவான் என்பதையும் சுட்டுகிருர். எனவே, வையம் வளம் பெற்று வாழ மனிதனுக்கு அடக்கம் இன்றியமை யாது வேண்டப்படுவது என்பது தேற்றம். ஒழுக்க முடைமை 28-8-71 மனிதன் உலகில் எல்லாவற்றையும்விட ஒன்றையே அதிகமாக மதிக்கிருன். ஆம்! அம் மதிப்பிற்குரியது அவன் உயிரே ஆகும். எதனே விடத் தயாராக இருப்பினும் 8.