பக்கம்:நாலும் இரண்டும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க முடைமை உயிரைவிட மட்டும் யாரும்-எதுவும் தயாராக இருப்ப தில்லை. எதிர்பாரத காரணங்களால் நிகழும் ஒருசில தற்கொலைகளைத் தவிர்த்து உலகம் இந்த உயிர் ஒம்பும் நெறியிலேயே வாழ்கின்றது. ஆயினும் இத்தகைய வாழ்க் கையில் உயிர்களை ஆற்றுப்படுத்தும் வள்ளுவர் அவ்வுயிருக்கு மேலாக மற்ருென்றினை வலியுறுத்திக் காட்டுகின்ருர். அது தான் ஒழுக்கம். ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும் என்பது அவர் வாக்கு. இதல்ை மனித வாழ்வே-சமுதாய வாழ்வே இவ்வோழுக்கத்தின் அடிப்படையில் கட்டப் பெற்றது என்பது தெற்றெனத் தெரிகின்ற தன்ருே? மக்களாகப் பிற ங் த வ ரு க்கு வரையறுக்கப்பட்ட வாழ்க்கை நெறிகளும் அவற்றின் வழியே அவர்களேச் செலுத்தும் ஒழுகலாறுகளும் உள்ளன. அத்தகைய ஒழுக்க நெறிகளை அன்றி மனிதன் வேறு வகையில் செல்வானுயின், அது அவனுக்கு மட்டுமின்றிச் சமூகத்துக்கே பெருங்கேடு தருவதாகும். உயிரினும் மேலாய ஒழுக்க நெறியை இன்றைய உலகில் பலர் மறந்ததனலேயே உலகிலும் காட்டிலும் பல கொடுமைகள் தாண்டவமாடுவதைக் காண் கின்ருேம். அவ்வொழுக்கமன்றி வேறு துணை, உயிரினத் துக்கு இல்லையெனக் கண்ட வள்ளுவர் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை என ஏகாரமிட்டு - அறுதியிட்டுக் கூறுகின்ருர். . . குலத்தாலோ பிறவற்ருலோ உயர்ந்தாராகத் தம்மைக் கருதி வாழ்வாரை நோக்கி, ஒழுக்க முடைமை குடிமை' என்றும், பிறப் பொழுக்கம் குன்ற (அனைத்தும்) கெடும்' என்றும் வள்ளுவர் உயிரொடு பிறந்த அவ்வொழுக்கத்தின் இன்றியமையா நெறியைச் சுட்டிக் காட்டி அறமுரைக் 9