பக்கம்:நாலும் இரண்டும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் கின்ருர். ஆயினும் மனித இனம் அவ்வொழுக்க நெறி கின்று வழுக்கி விழுந்து எங்கோ செல்கின்றது. ஒழுக்கம் என்பதுதான் யாது? இன்னர் இன்னின்ன வகையில் வாழ வேண்டும் என வரையறுத்த சில வாழ்க்கை நெறிகளே அவ்வொழுக்க அடிப்படைகளாகும். எடுத்துக் காட்டாக மாணவர், ஆசிரியர் போன்ருேருக்குப் பவணந்தி யாரும் பிறரும் காட்டும் ஒழுக்க நெறிகளை எண்ணலாம். அவற்றுள் ஒருசில கால வெள்ளத்தால் மாறும் கிலேயினை உலகிடைக் காணினும், அடிப்படை நெறிகள் மாறுவது இல்லையென்பது தெளிவு. உலக நெறிக்கு ஏற்பத் தம் வாழ்வினே அமைத்துக் கொண்டு, அடிப்படை ஒழுகலாற்று நெறிகளையும் மறக்காது வாழும் வாழ்வே தனிமனிதனையும் சமுதாயத்தையும் வாழ வைப்பது என்ற உண்மையைத் தான் வள்ளுவர், ' உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் ' (10) என்று இறுதிக் குறளில் விளக்கிக் காட்டுகின்ருர். 'உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலாவது உயர்ந்தோர் பலரும் ஒழுகியவாற்ருன் ஒழுகுதல், என விளக்கம் தருகிருர் உரையாசிரியர். இவர் உரை உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்ற தொல்காப்பியத்தின் அடியில் எழுந்ததே ஆகும். வள்ளுவர் இக் குறள்வழிக் காட்ட வந்த கருத்து, 'உலகம் வாழத் தான் வாழவே மனிதன் பிறந்தான்-அவன் பிறப்புக்கு ஏற்ப-சாதிக்கு ஏற்ப அன்று. மனிதப் பண்பாட்டு அடிப்படையில் அவன் மேற்கொண்டு ஒழுக வேண்டிய நெறிகள் உள்ளன. அவற்றை ஏட்டில் கற்கும் மனிதன் தன் வாழ்விலும் காட்டு வாழ்விலும் பொருந்த விட 10