பக்கம்:நாலும் இரண்டும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒழுக்க முடைமை வில்லையாயின் அவன் அதனைக் கற்பதால் பயன் விளையாது’ என்பதேயாம். எனவே உலகத்தோடு ஒட்ட உலகம் வாழத் தான் வாழும், தனக்கென வாழாப் பிறர்க்குரியாள குைம் தியாக உணர்வோடு கல்லோர் ஒழுகுவார்களாயின் நாடு நாடாகும் என்ற உண்மையை உணர்த்துகிருர் வள்ளுவர். எந்த நாளேக் காட்டிலும் இன்று இந்தச் செயல் மிகவும் வேண்டப் பெறுகின்றது. உலகம் அனைத்தும் தனக்கு என்ற உணர்வு தலை தூக்கி நின்று. 'தான் உலகுக்கு என்ற உணர்வு தேயும் இந்த நாளில் இந்த ஒழுக்கம் இன்றியமையாது வேண்டப்படுவதன்ருே இந்த ஒழுக்கம் சொல்லாலும் செயலாலும் உணர்த்தப் பெறும் என்பதனேயே வள்ளுவர் கடைசி இரு குறட்பாக்களில் விளக்கிக் காட்டுகிருர். திய வழுக்கியும் வாயால் சொல்லல் ஆகாது என்பர் அவர். சொல்லல் என்ருலே போதும். அதன் கொடுமை கருதியே வள்ளுவர் தமக்குரிய வற்புறுத்தும் இயல்பான நெறி நின்று வாயால் சொலல் எனக் காட்டுகின்ருர்: வாழும் உலகத்தொடு ஒன்றி வாழாமலும், வாய்க்கு வந்தபடி பேசியும் வாழ்வார் உலகில் எல்லா நலன்களேயும் இழப்பர் பழி எய்துவர் இடும்பை உறுவர் எனப் பல வகையில் வள்ளுவர் தாம் விளக்க வந்த ஒழுக்க நெறியையும் அதை மேற் கொள்ளார் தாமும் கெட்டு உலகையும் கெடுக் கும் கொடுமையையும் வற்புறுத்துகின்றனர். வள்ளுவர் வாய்மொழியைக் கற்கும் நாம், அவர் காட்டியபடி கம் உயிரினும் மேலாக, உலக வாழ்வவொடு ஒட்டிய உறவாக, ஒழுக்கத்தை மேற்கொண்டாலன்றி உலகம் உய்ய வழி யில்லே. இதை உணர்ந்து உலகொடு உலகாக, மக்களொடு மக்களாக வாழ்ந்து காட்டிய நம் தலைவர் பலருள் அண்ணல் 11