பக்கம்:நாலும் இரண்டும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் காந்தியடிகள் நம் கண்முன் நிற்கிருர். தாம் உயர்ந்தவர் என்ற கிலே மறந்து, ஏழையரொடு ஏழையாக, எங்கோ மூலை முடுக்குகளிலெல்லாம் அவர்களொடு அவர்களுக்காகவே வாழ்ந்து தம் மனிதப் பண்பைக் காட்டினர் காந்தியடிகளார். அடிகளார் காட்டிய அந்த ஒழுக்க நெறிகின்று. நாமும் 'நமக்கு உலகம் என்பதை மறந்து நாம் உலகுக்கு என்ற ஒழுக்க உணர்வில் செயலாற்றின் உய்தியுண்டு. இன்றேல் & © .o. to o ......யா ரறிவார்? பிறனில் விழையாமை 29-8-71 வள்ளுவர் வாழும் தமிழ்ச் சொற்களுக்குப் பலப்பல புதுப் பொருள்களைக் காட்டும் இயல்பினர். அறிவு-திய செறுவார்க்கும் செய்யாமை என்பர். அறம்-மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பர். கல்வி-தாம் இன்புறுவது உலகின் புறல் என்பர். வாய்மை-தீமை இலாத சொலல் என்பர். இவ்வாறு பொருள் காண்பதன் வழியே அச்சொற்களின் சிறப்பியல்புகளையும் அவற்றைப் பயன்படுத்தும் தமிழ்ச் சமுதாயத்தின் உயர்ந்த பண்பாட்டினேயும் வள்ளுவர் விளக்கிக் காட்டுவர். அதே அடிப்படையில் ஆண்மை’ என்ற சொல்லுக்கும் சிறந்த பொருள் காண்கின்ருர் இவர். ஆண்மையிற் சிறந்தது பேராண்மை. - உண்மையே! வள்ளுவர் எதனைப் பேராண்மை என்கிருர் பிறர் மன நோக்காப் பெருநெறியைத்தான்! பிறர்மனை நோக்காத பேராண்மை சான்ருேர்க்கு அறன்ஒன்ருே ஆன்ற ஒழுக்கு ’ (8) 12