பக்கம்:நாலும் இரண்டும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறனில் விழையாமை என்பது அவர் வாக்கு. இக்குறள் வழியும் இது உள்ள அதிகாரத்தின் வழியும் ஆண்மைக்கு நல்ல இலக்கணம் கற்பிக்கிருர் இவர்.ஒழுக்கமுடைமைக்குப் பின் இவ்வதிகாரம் அமைத்துள்ள கிலேயும் இதன் சிறப்பை நன்கு விளக்கு கிறது. மனேயாகிய பெண்மை நலத்தை ஆண்மை விரும்புவது இயல்பு. ஆனல் வள்ளுவரோ விரும்பாமையைப் பேராண்மை என்கிருர். உண்மைதானே. அப்பெண்மை கலம்-இன்பம் அறத்தாறு அமைவதே சிறப்பு. அப்போதே அதனைப் பெறுபவர் ஆண்மை உடையவர் ஆவர். அன்றித் தான், தன் ஆடவர் நிலைக்கு எளிதென இல் லிறக்கும் கொடுமை அவ்வாண்மையை அழிப்பதாகும் என்பதனையே வள்ளுவர் தெளிவாக்குகிருர். அறத்தாறு. இதுவென அறிந்து, ஒத்த மனைவியொடு இல்லற வாழ்வு நடத்துபவன் பிறர் மனைவியின் பெண்மையை விரும்பினுல் அறநெறி மாசு படும் எனச் சுட்டிக் காட்டி, அப்படியே அவன் இல்லாள் இத் தீய நெறியில் பிறர் ஆண்மையை விரும்பின் அவன் உள்ளம் என்னுகும் என்பதையும் சுட்டிக் காட்டிச் சூடு கெர்டுத்து, மக்கள் இனத்தைச் செம்மை நெறியில் ஆற்றுப் படுத்துகின்ருர். அறிவியலான் இல்வாழ்வான் எவனும் இந்தப் பிறன் மனையாளை விரும்பும் நெறி செல்லான் என்று காட்டியும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்ருர் வள்ளுவர். இருபதாம் நூற்ருண்டுக்கு இடையில் வாழும் மேலே காட்டு நாகரிகம் என்னும் சகதியில் வாழ்வாரும் பிறருக்குரிய பெண்களை விடுதலை செய்து ஏற்பதைக் கொள்கின்றனரே 'யன்றி, பிறர் பொருளாக உள்ள பெண்மையை நயப்பதை வெளிப்படையாகக் காட்டுவதில்லை அன்ருே? எனவே 13