பக்கம்:நாலும் இரண்டும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாலும் இரண்டும் கொடிய மாறுபாட்டிலும்கூட இக்கொடுமை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இருபதாம் நூற்ருண்டில் எதைச் செய்யினும் தவறில்லை என்ற ஒரு கொள்கைவழி, இத்தகைய அறங்களே எண்ணுவார் உள்ளனர். என்ருலும், வள்ளுவர் இவ் வாண்மையாகிய அறத்தை நுணுகி ஆராய்ந்து செயலில் மட்டுமின்றிச் சிந்தையிலும் இங்கில கொடியது எனக் காட்டுகிரு.ர். பெண்மையை உளத்தால் நயத்தலும், பிறர் மனே நோக்குதலுமாகிய உளத்தாலும் பார்வையாலும் உண்டாகும் குற்றங்களைச் சொல்லிய பின்பே, பிறர்க் குரியாள் தோள் தோயும் உடற் செயலைக் காட்டுகின்ருர். எனவே உளத்தாலும் நேரக்காலும் செயலாலும் மூன்றி டத்தும் விரும்பத்தகாத ஒன்று இது என்று காட்டி அதை விரும்பாதாரே-ஆண்மை உடையவரே-ஆடவர் என்ற விளக்கத்தையும் வள்ளுவர் தருகிருர். எந்த அறத்தை வற்புறுத்திலுைம் வள்ளுவர். அவற்றுக்கு அடிப்படையாகத் தோன்றும் எண்ணத்தையும் அது முகிழ்க்கும் உள்ளத்தையுமே சுட்டிக் காட்டுவர். 'உள்ளத்தால் உள்ளலும் திதே', 'மனத்துக்கண் மாசி லனதல்' என்பன அவர் வாக்குகளில் சிலவாகும். இந்த அடிப்படையை நன்குணர்ந்த கம்பர் இராவணன் இறந்த பிறகு, அவன் உள்ளத்தில் சீதையைப் பற்றிய கருத்து இருப்பினும் தவறு என்பதை உணர்த்தவே, ' கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி " என்ற அடிகளைப் பாடி இராவணன் உள்ளத்தையும், 14