பக்கம்:நாலும் இரண்டும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறனில் விழையாமை தூய்மையாக்குகிருர். எனவே, பிறர்மனே நோக்கலும். பிறர் மனயை உளத்தால் எண்ணுதலும் செயலொடு: ஒக்கும் எனக் காட்டி, அனைத்துமே தவருன செயல் களாகும் என விளக்குகிருர் வள்ளுவர். இந்த உண்மையை உணரும் போது ஆண்கள் தவறின், ஆண்மை நீங்கும் என்ருல் பெண்மைக்கு இந்த நியதியில் இல்லையோ என எண்ணத் தோன்றும். வள்ளுவர் பொது: வாக இருபாலரையும் உள்ளடக்கினரோ என்று உற்று: உணரும் படியாக, பிறன் கடை கின்ருரிற் பேதையர் இல்’ என்றும், தெளிந்தார் இல் தீமை புரிந்தொழுகுவார்’ என்றும் கூறுகிருர். பின் வந்த பாரதியாரும் கற்புகிலே என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃதைப் பொது வில் வைப்போம் என்று பாடினர். எனவே தமக்குரியர் அல்லாதாரிடம் இன்பம் பெறும் கிலே இருபாலருக்கும் தவறுடைத்தே எனத்தெளிதல் வேண்டும். இத்தகைய பிறனில் விரும்பாப் பேராண்மை உடையார்" அறனும் ஒழுக்கமும் உடையராய் உயர்ந்தோரால் போற்றப் பெறுவர் என்பதும், அல்லார் வேறு வகையில் மதிக்கப் பெறுவர் என்பதும் தெளிவு. உலகு வள்ளுவர் வாய்மொழி' அறிந்து, அறம் உணர்ந்து ஆன்ற ஒழுக்க நெறி நின்று. உயர்வதாக! 15