பக்கம்:நாலு பழங்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
டபீர் சுவாமி

ஒவ்வொரு நிமிஷமும் ஜாக்கிரதையாகக் கவனித்துச் செய்ய வேண்டிய காரியம். வீதி வழியாக யார் யார் போகிறார்கள், அவர்கள் உருவம், உடை, காதில் விழுந்த பேச்சு, போகும் நேரம் - இவைகளை எல்லாம் குறித்து வரும் வேலையை அவர் யாருடைய ஏவலுமின்றி, ஊதியத்தை எதிர்பாராமல் செய்துவந்தார். சாலையில் எந்த நிமிஷத்தில் யார் வருவாரென்று கண்டார்கள்? இளைய அழகிய மங்கை ஒருத்தி போவாள்; அடுத்த கணத்தில் கிழட்டு எருமை ஒன்று. அந்த வழியே ஓடும். கோபத்தோடு. இருவர் பேசிக்கொண்டே போவார்கள்; தொடர்ந்து 'கொம்மாளம் போட்டுக் கொண்டு சில சிறுவர்கள் நடப்பார்கள். எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக் கொள்ளும் கைங்கரியத்தை அந்த மகாராஷ்டிர கனவான் செய்து வந்தார். தேதிவாரியாக, மணி வாரியாக, நிமிஷ அடைவிலே கடிகாரத்தைப். போல அவர் உத்தியோகம் பார்த்தார். எவ்வளவு பொறுப்புள்ள வேலை!

தம்முடைய உத்தியோக சாலையின் ஜன்னல் வழியே உலகத்தைப் பார்த்து, அதன் பல வேறு பட்ட போக்குகளையும் குறிப்பெடுக்கும் ஆராய்ச்சியாளரைப் போல் அவர் வெகு சிரத்தையுடன் வேலை செய்தார். 'கலை கலைக்காகவே' என்று சொல்வார்களே, அந்த மாதிரி அந்த வேலையை வேறு. பயன் எதையும் கருதாமல் செய்து வந்தார்.

அவருக்குத் தாம் செய்து வந்த உத்தியோகத்தினால் ஏற்பட்ட உற்சாகம் கிடக்கட்டும்! அவர் வீட்