பக்கம்:நாலு பழங்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 - நாலு பழங்கள்

போட்டிருக்கிருன் என்று ஊகித்துக் கொண்டார் கள். - -

‘டபீர் என்ற சத்தம் கேட்டது என்ற குறிப்பு. இல்லாவிட்டால் திருட்டுப்போன பண்டம் கிடைத் திருக்காது என்பதை எண்ணியபோது, அந்தச் சம்பளம் இல்லாத உத்தியோகஸ்தரிடத்தில் அவர் களுக்கு அபார மதிப்பு ஏற்பட்டுவிட்டது. -

அவரை அரசரிடம் உபசாரத்தோடு அழைத்துச் சென்று, திருட்டுப் போன பாத்திரம் அவரால்தான் கிடைத்த்து என்று சொல்லி, அவர் உத்தியோகச் சிறப்பையும் எடுத்துரைத்தார்கள். டபீர் என்ற சத்தத்தைக் கவனித்துக் குறிப்பு எழுதிய அந்தக் கனவானுக்கு டபீர் சுவாமி' என்ற பட்டமும், ராஜ சம்மானமும் கிடைத்தன, - -

கதையைச் சொல்லிவிட்டு, டபீர் ஸ்வாமியின் வரலாறு பொருத்தமாக இருக்கிறதா?’ என்ருர், பூரீநிவாசையர். -