பக்கம்:நாள் மலர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1939 www 18

  • கவி காளமேகம்

- திரைப்படத்திற்குக் கதை- உரையாடல் பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல். 1941- எதிர்பாராத முத்தம்- காவியம், காஞ்சி பொன்னப் பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சௌத்திரி. 1942-- குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண் டாம் உலகப்போரை-இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல். 1943- பாண்டியன் பரிசு- காவியம் வெளியிடல். 1944- பெரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். 'இன்ப இரவு* (புரட்சிக்கவி) முத்தமிழ் நாடகம் அரங் கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள். நல்ல தீர்ப்பு, (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வெளியிடல். 'சதிசுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல் பாட்டு எழுதுதல், குடும்ப விளக்கு {| வெளியிடல், செட்டி நாடு முழுதும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என். எஸ். கே. வுக்காக எதிர்பாராத முத்தம் - நாடகமாகத் தருதல். 'கற்கண்டு' பொறுமை கடலினும் பெரிது' இணைத்து எள்ளல் நூல் வெளியிடல். 1945- புதுவை, 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது). 'எது இசை' நூல்கள் வெளியிடல். 1946- 'முல்லை" இதழ் தொடங்கப்பட்டது. அமைதி ஊமை நாடகம் வெளியிடல். (29-7-46) பாவேந்தர் 'புர ஃசிக்கவி' என்று போற்றப்பட்டு ரூ.25000- கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொன்னாடை அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் போர்த்தி, தமிழகப் பேசினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/15&oldid=1524969" இலிருந்து மீள்விக்கப்பட்டது