பக்கம்:நாவல் பழம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக வரலாமே தவிர திசை திருப்பும் முதலாளித்துவ கருவி யாக மாறிவிடக் கூடாது. ஆனல் ஏழை மக்கள் நிறைந்த இந்த தேசத்தை ஜாதி, மத, மொழி வெறிகளில் பிளவு படுத்திப் புதிய உருவம் கொள்ளத் துடித்த முதலாளித்து வம் தமிழகத்தைப் பற்றி எரிய வைத்தது. தொல்காப்பி யத்தை எத்தனைபேர் படிக்கிருர்கள் என்பதல்ல இன்றைய பிரச்சனை; தோட்டிகளில் எத்தனைபேர் பசியில்லாமல் உண்கிருர் என்பதுதான். துரதிஷ்டவசமாக மொழிப் போராட்ட நிழல் யுத்தம் 1965-ல் வெடித்தது. மொழியைக் காட்டு தேவதையாக்க நாங்கள் விரும்பவில்லை. ஒழுங் காகச் சட்டை போடுவதால் எவனுக்கும் நோபல் பரிசு வருவதாக இல்லை. ஆனல் ஒவ்வொருவனும் சட்டையைக் கிழித்துக் கொண்டு அலைந்தால் தேசமே கீழ்பாக்கம் ஆகி விடும். தமிழுக்குரிய சராசரி மரியாதை எவராலும் தரப் பட்டே ஆகவேண்டும் என்று மாணவர் முழக்கம் முழக் 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/47&oldid=786098" இலிருந்து மீள்விக்கப்பட்டது