பக்கம்:நாவல் பழம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று கிராமங்களில் வழங்கப்படும் ஒரு நாடோடிப் பாடல் விவரிக்கிறது. ஆனல் அத்தகைய கதாபாத்திரங் களே வைத்துப் படைக்கப்பட்ட சமூக நாவல்கள் தமிழில் படைக்கப்படவில்லை. அதே நேரத்தில் 'ராஜஸ்தானத்து அந்தப் புரங்கள்' என்ற ராகுலசாங்கிருத்தியாயனின் படைப்பு இந்தப் பின்னணியை விளக்கும் அற்புத சிருஷ் யாக மலர்ந்துள்ளது. ஒரு பத்தாண்டுகட்கு முன்பு திடீ ரென்று நினைத்துக்கொண்டு தமிழில் சுதந்திரப் போராட்ட காலத்தை விவரிக்கும் நாவல்களே இல்லை என்றும் நம் எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்த பிறகுதானே 'ஆத்மா வின் ராகங்கள், வளைக்கரம்' ஆகிய படைப்புக்கள் நமக் குக் கிடைத்தன. இவவுளவு தாமதமாக நமது சுதந் திரத்தைக் கொண்டாடும் இலக்கிய வீரர்கள் நாம். வெளிப்படையாக விமர்சனம் செய்தால்... சிறுகதைத் துறையில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோர் 55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/61&oldid=786126" இலிருந்து மீள்விக்கப்பட்டது