பக்கம்:நாவல் பழம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுந்தது. இத்தகைய சரித்திர ரீதியான மாறுதல்களைச் சரத்சந்திரரன் நாவல்கள் சித்தரிக்கின்றன. குருவாயூர்க் கோவில்... அதையொட்டிய வரலாறுகளை வைத்துமட்டுமே “நூறு பூக்கள் மலரட்டும்' என்ற கேரள நாவல் எழுந்: துள்ளது. ஆனல் தமிழில் ஜமீன் ஆட்சிக் கால கட்டத் தில் பல விசித்திரமான சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டன. அப்போது ஏற்பட்ட சில புரட்சிகர நிகழ்ச்ச்சிகள் நாடோடிப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எங்கள் பகுதியில் ஒரு ஜமீன்தாரணி. வீரத்தைப் போற்றி யவள், ஜமீன்தாரரை விட்டு விட்டு ஒரு மறவனை மணந்து கொண்டு அவனோடு சென்றுவிட்டாளாம்! அவளுடைய கதையை 'நீலப் புடவைக்காரி நிலக்கோட்டை காமுலம்மாள் மறவன்மேல் ஆசைவச்சு மன்னவனைத் துறந்த ராணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/60&oldid=786124" இலிருந்து மீள்விக்கப்பட்டது