பக்கம்:நாவல் பழம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துளிச் சிந்தும் மாலைக் காலம் முத்துக்களைப் பரிசளிப் பதைப் போல எளிய நடையில் ஆழமான உண்மைகளை விளக்குகிரு.ர். 'மாமனர் சொத்தை எதிர்பார்ப்பதுதான் மாணவர்கள் படிப்பு முடிந்ததும், உலகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் முதல் பொருளாதாரப் பாடமாக இருக்கிறது’ என்ற வரிகள் எதார்த்தமான உண்மைகளைத் தோலுரித் துக் காட்டுகின்றன. செல்லத்தட்டு தட்டுவதைப் போல போகிற போக்கில் நளினமாக இந்தச் சமூகத்தைச் சீண்டுவது ராசீக்கு கைவந்த கலையாகத் தெரிகிறது. வரிசையாக இருந்த வெள்ளிக் குவளைகளில் இரண்டை சிவா எடுப்பது சிரித்துக் கொண்டிருந்த பற்களில் இரண்டைப் பிடுங்கித் தனியே வைப்பதைப் போல இருந்ததாம். ஜெயகாந்தனின் 63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/69&oldid=786142" இலிருந்து மீள்விக்கப்பட்டது