பக்கம்:நாவல் பழம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பந்தல் போட்டமாதிரி சுகமான நிழல். வெண் மணல் பரப்பு! அந்தத் தோப்பையும், மணல் பரப்பையும் பார்த்து லயித்த கவிதைக் கிறுகிறுப்பில் "இங்கே ஒரு பாலைவனம் இளைப்பாறிக் கொண்டிருக்கிறது" என்று மனம் முணுமுணுக்கிறது. கையிலே ஒரு நாவல் புத்தகம் இருக்கிறது. கூப்பிடும் தூரத்தில், அந்த மெளன வெளியின் கதவுகளைத் தட்டுவது போல் யார்வீட்டு மாட்டுக்கோ லாடம் அடிக்கின்ரார்கள்.


தோப்பின் கடைசி மூலையில்...மணல் மேட்டிற்கு அருகிலுள்ள கூட்டு மரங்களின் நிழலில் அமர்ந்து கொள்கிறேன்.


மெளனம் என்பது சில நேரங்களில் கம்பீரம் பெறும் போது...மனித உடலுக்கு இதயம் கிரீடம் ஆகிற இலக்கிய சாம்ராஜ்யம் உருவாகி விடுகிறது. ஒசைகள் அங்கே எழுவதில்லை. ஆனால் உதடுகளில் வார்த்தைகள் தாமாகவே வந்து ஒட்டிக் கொள்கின்றன. பெளர்னமி ராத்திரியில் படகுகளும், மனிதர்களும் அற்ற தேவ வேலையில் உருவாகும், அமைதியான சலனம் காட்டும் கடல் அலை

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/8&oldid=1064584" இலிருந்து மீள்விக்கப்பட்டது