பக்கம்:நாவல் பழம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரைப் போல. தனிமையில் அந்த நாவல் புத்தகத்தில் என் உணர்வுகள் புரள்கின்றன.

எங்கள் ஊர்க் குளம், பரந்த புல்வெளி, இடையிடையே ஒடைகள் இருக்கும், கருவேல மரங்கள் இருபுறமும் சுற்றி உயர்ந்து பின்னிப் படர்ந்தும், ஓடைக் கரைகளை மணல் வீடுகளாக மாற்றும் கோலங்கள்! கசடறக் கற்பதற்காக ஒரு வகுப்பில் பல வருடம் தங்கும் முதிர்ந்த மாணவர்கள் பீடிகுடிக்கக் கருவேல மர முள்களில் குத்திவைத்து விட்டுப் போன 'தீப் பெட்டிப் பிசிறுகள்' ஒடையில் தண்ணிர் வராவிட்டால், நிழலிலே கூடக் குளிக்கலாம் எனத் திகைக்க வைக்கும் அளவு மனத்திற்குள் மயக்க நீச்சல். நாவல் நூல் என் கையில் இருக்கும். யாரோ ஒரு பிரியமான ஊமைக் காதலியை நிர்வாணமாக்கி, தெய்வீகமாக ரசிப்பதைப் போல, துளும்பும் மெளனத்தோடு பக்கம் பக்கமாகப் புரட்டுவேன். ஒ , அது ஒரு தனிமையில்லாத தனிமைஅல்லவா?

எப்போதும் மணலாகவே இருக்கும், தூரத்துப் பார்வைக்கு மணலைக்கயிருகத் திரித்ததுபோல் தோற்றம்

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/9&oldid=1064701" இலிருந்து மீள்விக்கப்பட்டது