பக்கம்:நாவுக்கரசர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (1) 57.

படைகள்போல் வினைகள் வந்து

பற்றிஎன் பக்க னின்றும் விடகிலா ஆத லாலே

விகிர்தனை விரும்பி ஏத்தும் இடையிலேன் என்செய் தேன்நான்

இரப்பவர் தங்கட் கென்றும் கொடையிலேன் கொள்வ தேநான்

கோவல்வி ரட்ட னாரே! (1)

என்பது ஏழாவது திருப்பாடல். தமக்கு எந்தவிதமான நியமம் இல்லையென்றும், ஐம்புலன்கள் செய்யும் கொடுமை களைத் தாங்க முடியவில்லையென்றும் நொந்து பேசுகின் றார் அடிகள். பாடல்கள் படிக்கப் படிக்கப் பாடிய வாய் தேனுாறும்படியாக உள்ளது.

கோவல் வீரட்டனாரிடம் விடைபெற்றுக்கொண்டு பெண்ணாகடம் 5 வருகின்றார். பொன்னார் திருவடி’ (4.109) என்ற திருப்பதிகத்தால் வழிபடுகின்றார். தூங்கானை மாடம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமானைத் தொழுது, பெருமானே, புன்மைமிக்க நெறியாகிய சமண் சமயத்தில் தொடக்குண்டு வருந்திய இவ்வுடம்புடனே இனி உயிர் வாழ்ந்திருக்கத் தரியேன். அடியேன் இவ்வுடம்பினைப் பொறுத்திருப்

5. பெண்ணாக்டம் (பெண்ணாடம்) திருச்சி - விருத்தா சலம் இருப்பூர்தி வழியில் பெண்ணர்டம் என்ற நிலையத் திலிருந்து 1 கல் தொலைவு. தலப் பெயர் கடந்தை’ என்றும், ஆலயப் பெயர் துரங்கானை மாடம்’ என்றும் வழங்கும். கவிக்கம்ப நாயனார் வாழ்ந்த தலம். அப்பர் பெருமானுக்கு சூலக் குறியும், இடபக் குறியும் பொறிக்கப் பெற்ற தலம். அச்சுதகளப்பாளர் என்ற வேளாளர் திருவெண்காட்டு முக்குள நீராடி வழிபாடு செய்து மெய் கண்டார்’ என்ற மகனைப் பெற்ற தலம். மெய்கண்டார் சிவஞான போதம் அருளிச்செய்து திருக்கயிலாய பரம்பரை யைத் தமிழ்நாட்டில் தாபித்த சந்தான முதற்குரவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/100&oldid=634088" இலிருந்து மீள்விக்கப்பட்டது