பக்கம்:நாவுக்கரசர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. நாவுக்கரசர்

பதற்கு இசைவாக நின்னுடைய சூலமும் இடபமும் ஆகிய இலச்சினையை என்மேல் பொறித்தருளவேண்டும்’ என்று விண்ணப்பிக்கின்றார்.

பொன்னார் திருவடிக் கொன்றுண்டு

விண்ணப்பம் போற்றிசெய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண்

டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென

மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை

மாடச் சுடர்க்கொழுந்தே. (1)

கடவுங் திகிரி கடவா

தொழியக் கயிலையுற்றான் படவும் திருவிர லொன்று வைத் தாய் பனி மால்வரைபோல் இடவம் பொறித்தென்னை ஏன்றுகொள்

ளாயிருஞ் சோலைதிங்கள் தடவும் கடந்தையுள் தூங்கானை

மாடத்தெங் தத்துவனே. (10)

என்ற திருவிருத்தங்களில் இந்த விண்ணப்பத்தைக் கண்டு மகிழலாம். இதனைப் பாடியவுடனே இறைவன் அருளால் சிவபூதம் ஒன்று அருகிலுள்ளார் எவரும் அறியாதபடி அங்குத் தோன்றி திருநாவுக்கரசரின் திருத்தோள்களில் மூவிலைச் சூலமாகிய இலச்சினையை இடப இலச்சினை யுடன் பொறித்துச் செல்லுகின்றது. இதனையுணர்ந்த நாவுக்கரசர் மனமகிழ்ந்து சிவபெருமான் திருவருளை நினைந்து கண்ணிர் சொரிய நிலமிசை வீழ்ந்தெழுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/101&oldid=634089" இலிருந்து மீள்விக்கப்பட்டது