பக்கம்:நாவுக்கரசர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நாவுக்கரசர்

"(6.68) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடி வழிபடுகின்றார்.

எத்திசையும் வானவர்கள் தொழகின் றானை

ஏறுர்ந்த பெம்மானை எம்மான் என்று பக்தனாய்ப் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள்

பாமாலை பாடப் பயில்வித் தானை முத்தினை என்மணியை மாணிக் கத்தை

முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானை சித்தனைஎன் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. (3)

என்பது இப்பதிகத்தின் மூன்றாவது தாண்டகம். பாடல் தோறும் தீவினையேன் அறியாதே திகைத்தவாறே என வரும் தொடர் அப்பர் பெருமானின் மனநிலையைக் காட்டி நம்மை நெகிழ வைக்கின்றது.

பழமலை நாதரை வணங்கி விடைபெற்றுக்கொண்டு கீழ்த்திசை நோக்கித் திரும்பி நிவாநதியாகிய வெள்ளாற்றங் கரை வழியே ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து எல்லையில்லாச் செல்வம் நிறைந்த திருத் தில்லையை நோக்கி வருகின்றார். தில்லைக்கு வரும் வழி யையும் தில்லைச் சூழ்நிலையையும் அற்புதமாக வருணித்துக் காட்டுவார் சேக்கிழார் பெருமான். தில்லைப்பதியின் மேலைக் கோபுர வாயில் வழியாகச் சிவமே நிலவும் திருவீதி யைத் தொழுது வலங்கொண்டு எழுநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் பொன் மாளிகையை வலம் வருகின்றார். அப் பொழுது இவர் நிலையைச் சேக்கிழார் பெருமான்,

கையுந் தலைமிசை புனைஅஞ் சலியன:

கண்ணும் பொழிமழை ஒழியாதே, பெய்யும் தகையன: கரணங் களும்உடன்

உருகும் பரிவன; பேரெய்தும்

8. பெ, பு. திருநாவுக். 157-161

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/103&oldid=634091" இலிருந்து மீள்விக்கப்பட்டது