பக்கம்:நாவுக்கரசர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (1) 61

மெய்யுங் தரைமிசை விழுமுன் பெழுதரும்

மின்தாள் சடையொடு கின்றாடும்;

ஐயன் திருருடம் எதிர்கும் பிடும்அவர்

ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.”

என்ற பாசுரத்தால் காட்டுவார். வலம் வந்தவர் கனகசபை யினைக் கண்ணுற்று மன்றுள் ஆடும் நடராசர் முன் அணை கின்றார். கூத்தப் பெருமான் வாசீசரை நோக்கி, என்று வந்தாய்?’ என வினவும் அருள் நோக்குடன் காட்சி தந் தருள்கின்றார். இத்திருக்குறிப்பினை உணர்ந்த அப்பர் பெருமான் ‘கருகட்ட கண்டனை’ (4.81) என்ற திருவிருத் தம் பாடிப் போற்றுகின்றார். கூத்தப் பெருமான் தன்னை வினவிய அருட் குறிப்பினை,

ஒன்றியிருந்து கினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற்

கடிந்தான் அடியவற்காய்ச் சென்றுதொழுமின்கள் தில்லையுட்

சிற்றம் பலத்துகட்டம் “என்றுவந் தாய்?’ எனும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே.(2)

என்ற இப்பதிகத்தின் இரண்டாவது பாடலில் தெளி வாகக் குறிப்பிடுகின்றார். இந்த வினாவுக்கு விடை கூறுவது போல் “பத்தனாய் (4.23) என்று தொடங்கும் பதிகம் அமைகின்றது.

பத்தனாய்ப் பாட மாட்டேன்

பரமனே பரம யோகீ எத்தினாற் பத்தி செய்கேன்

என்னைt இகழ வேண்டா

9. டிெ டிெ - 167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/104&oldid=634092" இலிருந்து மீள்விக்கப்பட்டது