பக்கம்:நாவுக்கரசர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ந்ாவுக்கரசர்

முத்தனே முதல்வா தில்லை

அம்பலத் தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காண்பான்

அடியனேன் வந்த வாறே. (1) என்ற நேரிசையினைப் பாடித் துதிக்கின்றார்.

பின்னர்த் தில்லை முன்றில்களிலும் திருவீதிகளிலும் உழவாரத்தினால் கூடிய பணிகள் செய்து தொண்டு புரி கின்றார். இந் நிலையில் அன்னம் பாலிக்கும்’ (5.1) ‘பனைக்கை மும்மதம் (4.2) என்ற குறுந்தொகைப் பதிகங் கள் பாடி மகிழ்ந்திருக்கின்றார்.

அல்லல் என்செயும்? அருவினை என்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்? தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோர் அடிமை பூண்டேனுக்கே(5.1:4) தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைழுத லாய ஒருவனைப் பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக் கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ? (5.2:2) என்ற குறுந்தொகைப் பாடல்களைப் பாடிஅநுபவிக்கலாம். கூத்தப் பெருமான்மீது அப்பர் பெருமான் எட்டு பதிகங்கள் பாடியுள்ளார்.19. -

தில்லையிலிருந்து திருவேட்களம்’ என்னும் திருப் பதிக்கு வருகின்றார். நன்று நாள்’ (4.42) என்ற முதற்

10. மேற்குறிப்பிட்டவை போக மீதி 4-22; 4.80; 6-1; 6–2.

11. வேட்களம்: சிதம்பரம் இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 1 கல் தொலைவு. பேருந்து வசதியுண்டு. அண்ணா மன்லப் பல்கலைக் கழக வளாகத்தின் கீழ்க்கோடியில் உள்ளது. அருச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற்ற தலம். சம்பந்தர் இத்தலத்தைத் தம் தங்குமிடமாக வைத்துக் கொண்டு தில்லைக்கு அவ்வப்போது வழிபடச் செல்வார் என்று பெரியபுராணம் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/105&oldid=634093" இலிருந்து மீள்விக்கப்பட்டது