பக்கம்:நாவுக்கரசர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (1) 63

குறிப்புடைய பதிகம் பாடி வேட்களத் திறைவனை வழிபடு கின்றார்.

அல்லல் இல்லை; அருவினை தானில்லை; மல்கு வெண்பிறை சூடும் மணாளனார் செல்வ னார்திரு வேட்களம் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே(4)

என்பது இப்பதிகத்தின் நான்காவது பாடல். அடுத்து திருக் கழிப்பாலைக்கு’ எழுந்தருள்கின்றார். ‘வன்பவள வாய் திறந்து’ (4-6) என்ற பதிகம்பாடிக் க ழி ப் பா லை இறைவனை வழிபடுகின்றார். இது நாயகி நிலையில் “தாய்ப் பாசுமாக அமைந்துள்ளது. அதாவது தாய், காதல் வாய்ப் பட்ட தன் மகள் நிலையை எடுத்துக் கூறுவதாகப் பாசுரம் நடக்கின்றது. -

முதிரும் சடைமுடிமேல் மூழ்கும்

இளநாகம் என்கின் றாளால், அதுகண் டதனருகே தோன்றும்

இளமதியம் என்கின் றாளால்; சதுர்வெண் பளிக்குக் குழைகாதின. மின்னிடுமே என்கின் றாளால்; கதிர்முத்தம் சிந்து கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ?(7)

என்பது இப்பதிகத்தின் ஏழாவது பாடல். சதா சிவ பெருமான் மேனியில் காணப்பெறும் இளநாகம், இள மதியம், காதுக்குழை இவற்றைப் பேசிப் பேசி வாய் வெருவு கின்றாள். என் மகள் கதிர்ப்பாலைக் கண்டிருப்பாளோ?”

12. கழிப்பாலை: சிதம்பரம் இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 8 கல் தொலைவிலுள்ளது. பழைய தலம் கொள்ளிட நதி வெள்ளம் அடித்துச் சென்றது. இப்போ துள்ள கோயில் நெல்வாயில் ஆகிய சிவபுரியில் ஒரு தனிக் கோயிலாக உள்ளது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/106&oldid=634094" இலிருந்து மீள்விக்கப்பட்டது