பக்கம்:நாவுக்கரசர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நிர்வுக்கரசர்

என்று தாய் பேசுவதைப் பாடலில் காணலாம், இதனைத் தவிர வேறு நான்கு பதிகங்களைப் பாடிப் போற்றுகின்றார் இத்தலத்து எம்பெருமானை 18 தொடர்ந்து பாடுவதில் ‘நங்கையைப் பாகம் வைத்தார்’ (4.30) என்ற பதிகத்தில்,

அரியன அங்கம் வேதம்

அந்தணர்க் கருளும் வைத்தார்; பெரியன புரங்கள் மூன்றும்

பேரழல் உண்ண வைத்தார்; பரியதீ வண்ண ராகிப்

பவளம்போல் நிறத்தை வைத்தார்; கரியதோர் கண்டம் வைத்தார்;

கழிப்பாலைச் சேர்ப்ப னாரே(4)

என்பது நான்காவது பாடல். “நெய்தற்குருகு'(4106) என்ற பதிகத்தில்

நெய்தற் குருகுதன் பிள்ளை என்

றெண்ணி நெருங்கிச் சென்று கைதை மடல்புல்கு தென் கழிப்

பாலையதன் உறைவாய் uைதல் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம் எய்தப் பெறினிரங் காது

கண்டாய்எம் இறையவனே(1)

என்பது முதற் பாடல். இப்பதிகத்தில் மூன்று பாடல்களே உள்ளன.

“வண்ணமும் வடிவும்’ (5.40) என்ற குறுந் தொகைப் பதிகமும் அகப்பொருள் துறையில் தாய்ப் பாசுரமாகவே’ அமைந்துள்ளது.

18 அப்பர் 4.30: 4.106; 5.40: 6.12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/107&oldid=634095" இலிருந்து மீள்விக்கப்பட்டது