பக்கம்:நாவுக்கரசர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தோழமை 75

வேட்கையை ஆளுடைய பிள்ளையாருக்குத் தெரிவிக்கின் றார்.இருவரும் திருக்கோலக்கா வருகின்றனர். இறைவனை வழிபடுகின்றனர். (நாவுக்கரசர் பதிகம் இல்லை.) பின்னர் சம்பந்தருடன் விடைபெற்றுச் சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் (இரண்டாவது சுற்று) தொடங்குகின்றார்.

5. கோலக்கா (திருத்தாள முடையார் கோயில்): சீகாழியிலிருந்து ; கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர் கையினால் தாளம் போட்டுப் பாடும்போது இத்தலத்து ஈசன் ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளம் இரண்டை அவருக்குத் தந்தான், அம்பிகை தாளங்கட்கு ஓசை தந்தாள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/118&oldid=634107" இலிருந்து மீள்விக்கப்பட்டது