பக்கம்:நாவுக்கரசர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 79

என்பன மூன்றாம், ஐந்தாம் பாசுரங்கள். சென்ற நாட்களுக்கு இரங்கி வருந்திப் பாடிய பதிகம் இது. ஒவ்வொரு பாடலும் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே என்று இறு கின்றது. இப்பதிகப் பாடல்கள் யாவும் உள்ளத்தை உருக்கி பக்திச் சுவையில் தேக்கிடச் செய்பவை.

அடுத்து, புள்ளிருக்கு வேளுரான் வைத்தியநாதனிடம் விடைபெற்றுக்கொண்டு, திருப்புன்கூர்க் வருகின்றார். *பிறவாதே தோன்றிய’ (6.11) என்ற முதற் குறிப்புடைய தாண்டகப் பதிகம் பாடி புன்கூர் இறைவனைப் போற்று கின்றார். - -

இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை

இனியகினை யாதார்க் கின்னா தானை வல்லானை வல்லடைக் தார்க்கருளும் வண்ணம்

மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்

திருப்புன்கூர் மேவிய சிவ லோகனை நெல்லால் விளைகழனி டுே ரானை

தேனே னென்னேநான் கினையா வாறே.(3) என்பது இப்பதிகத்தின் மூன்றாவது தாண்டகம்.

திருப்புன்கூர் பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு டுேர் வருகின்றார் அப்பர் பெருமான். பிறவாதே தோன்றிய'(6.11) என்னும் முதற் குறிப்புடைய பதிகத்தில், 4. புன்கூர் (திருப்புன்கூர்) : வைத்தீஸ்வரன் கோயிலி லிருந்து 2'கல் த்ொலைவிலுள்ளது. திருநாளைப் போவா ருக்குத் தேர் நிலையிலிருந்தே இறைவன் காட்சியளிக்கத் திருநந்தி தேவரை விலகியிருக்கும்படிக் கட்டளையிட நந்தி தேவரும் அவ்வாறே விலகியிருக்கும் தலம். திருநாளைப் போவார் திருப்பணியாகக் கோயிவின் மேற்கில் நந்தன் குளம் உள்ளது. ஏயர்கோன் கவிக்காம நாயனாரிடத்தில் 12 வேலி நிலங் கொண்டு மழை பெய்வித்ததைப் பாசுரம் (சுந்த 7.5.5:2) கூறும். -

5. கீடுர் ; கடலூர் . மயிலாடுதுறை இருப்பூர்தி வழி யில் நீடூர் நிலையத்திலிருந்து 1 கல் தொலைவிலுள்ளது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/122&oldid=634112" இலிருந்து மீள்விக்கப்பட்டது