பக்கம்:நாவுக்கரசர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 8 நீர்வுக்கரசர்

உள்ளம் உள்கி உகந்து சிவனென்று மெள்ள உள்க வினைகெடும் மெய்மையே புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளுர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. (8)

என்பது எட்டாம் பாடல். புள்ளிருச்கு வேளுரானை உள்ளம் உருகி நைபவர்களின் வினைகள் கெடும் என்கின்றார். :ஆண்டானை’ (6.54) என்ற முதற் குறிப்பினை யுடைய செந்தமிழ்த் திருத்தாண்டக மாலையில்,

பத்திமையால் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்

பாமாலை பாடப் பயில்வித் தானை எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை

எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும் அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை

அண்ணிக்கும் தீங்கரும்பை அரனை ஆதிப் புத்தேளைப் புள்ளிருக்கு வேளு ரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே...(3)

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு

வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்நீத் தன்னுருவில் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த்

தரணிதலத் தஞ்சாகி எஞ்சாத் தஞ்ச மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை

வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப் பொன்னுருவைப் புள்ளிருக்கு வேளு ரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. (5)

நாயகி (சோமாஸ் கந்த அமைப்பு வரிசையில்) எழுந் தருள்வர். செவ்வாய் தோஷம் போக்கும்தலம். செவ்வாய்க் கிழமைதோறும் மேஷ (ஆடு) வாகனத்தில் அங்காரகன் பிராகாரத்தில் வலம் வருவதுண்டு. முத்துக் குமார சுவாமி பிள்ளைத் தமிழ் குமரகுருபர சுவாமிகள் அருளியது. தல புராணம் வடுகநாத தேசிகர் இயற்றியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/121&oldid=634111" இலிருந்து மீள்விக்கப்பட்டது