பக்கம்:நாவுக்கரசர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 77

ஆல கீழல் அமர்ந்த அழகனார் கால னையுதை கொண்ட கருத்தனார் கோல மஞ்ஞைகள் ஆலுங் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே, (7)

என்பது ஏழாம் பாடல். கல்லால மரத்தின்கீழ் அமர்ந்த அழகனும் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய குரக் குக்கா ஈசன் பரிவுணர்ச்சியோடு வந்து அருளுவான் என் கின்றார். இப்பதிகத்தில் பொன்னி நதியின் கோலம் வித விதமாகக் காட்டப்பெறுகின்றது.

குரக்குக்கா ஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு திருப் புள்ளிருக்கு வேளுர் வருகின்றார் வாகீசப் பெருமான்; இரண்டு செந்தமிழ்ப் பதிகங்களால் வைத்திய நாதனை வழி படுகின்றார். ‘வெள்ளெருக்கரவம் (5.79) என்ற திருக்குறுந் தொகைப் பதிகத்தில்,

2. குரக்குக்கா : வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 6 கல் தொலைவிலுள்ளது. கருப்பறியலூர், திருப்புன்கூர் இவற்றின் அருகிலுள்ள தலம். ஆஞ்சனேயர் வழிபட்டதால் “குர்க்குக்கா என்று பெயர் பெற்றது.

3. புள்ளிருக்கு வேளுர்: இது வைத்தீஸ்வரன் கோயிலின் இன்னொரு பெயர். புள் (சடாயு, சம்பாதி) இருக்கு (=ரிக் வேதம்), வேள் (=முருகன்) பூசித்த தலம். இற்ைவன் வைத்தியநாதன் தீராத நோய் தீர்த்தருள வல்லான்’ (6.54.8). அம்பிகை தையல் நாயகியின் அருட்பார்வையி லிருப்பது சித்தாமிர்த தீர்த்தம், சிறப்பெல்லாம் செல்வ முத்துக் குமாரசாமி எனும் முருகனுக்கே. கிருத்திகை தோறும் பகலில் மகாபிஷேகமும் இரவில் உற்சவமும் செல்வ முத்தையாவிற்கு உண்டு. அடியார்கள் ஆயிரக் கணக்கில் தரிசித்துச் சந்தனக் குழம்பு பெறுவர்.நாடோறும் அர்த்த சாமப் பூசையில் முதலில் முத்தையாவிற்குப் பால் நிவேதனம். நேத்திரப்பிடி சந்தன. அர்ப்பணம் செய்த பிறகே, மற்ற மூர்த்திகட்கு வழிபாடு. பஞ்ச மூர்த்திகள் திருவீதியுலாவில் வலப்பக்கத்தில் வைத்தியநாதர், நடுவில் செல்வ முத்துக்குமாரசாமி, இடப்பக்கத்தில் (தையல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/120&oldid=634110" இலிருந்து மீள்விக்கப்பட்டது