பக்கம்:நாவுக்கரசர்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 8i

ஆத்தமாம் அயனும் மாலும்

அன்றிமற் றொழிந்த தேவர் சோத்தமெம் பெருமான் என்று

தொழுதுதோத் திரங்கள் சொல்லத் தீர்த்தமாம் அட்டமி.முன்

சீருடை ஏழு நாளும் கூத்தராய் வீதி போந்தார்

குறுக்கைவி ரட்ட னாரே. (2)

என்பது இரண்டாவது பாடல்.

குறுக்கை வீரட்டத்துப் பெருமானிடம் விடைபெற்று கின்றியூர் வருகின்றார். கொடுங்கண் வெண்தலை’ (5.23) என்ற குறுந்தொகைப் பதிகத்தால் போற்றுகின்றார்.

அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும் நெஞ்சம் வாழி கினைகின்றி யூரைt இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக் குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே. (6) என்பது ஆறாவது பாடல்.

நின்றியூர் அண்ணலிடம் விடைபெற்றுக்கொண்டு வாகீசர் நனி பள்ளி வருகின்றார். ‘முன்றுணை யாயி னானை” (4.70) எனத் தொடங்கும் திருநேரிசைப் பதிகம் பாடி நின்றியூர் இறைவனைச் சேவிக்கின்றார்.

7. கின்றியூர், கடலூர் - மயிலாடுதுறை இருப்பூர்தி, வழியிலுள்ள ஆனதாண்டவபுரம் என்ற நிலையத்திலிருந்து 2கல் தொலைவிலுள்ளது. திருமகள் இத்தலத்து எம் பெருமானைப் பூசித்ததைச் சுந்தரர்பாசுரம்கூறும், (சுந்தரர் 7.65;3)

8. நனிபள்ளி (புஞ்சை) மயிலாடுதுறை-தரங்கம்பாடி இருப்பூர்திப் பாதையில் உள்ள செம்பொனார் கோயில் நிலையத்திலிருந்து 2; கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர்

-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/124&oldid=634114" இலிருந்து மீள்விக்கப்பட்டது