பக்கம்:நாவுக்கரசர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நாவுக்கரசர்

துஞ்சிருள் காலை மாலை

தொடர்ச்சியை மறந்தி ராதே அஞ்செழுத் தோதின் நாளும்

அரானடிக் கன்ப தாகும் வஞ்சனைப் பாற்சோ றாக்கி

வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்கு வித்தார்

நனிபள்ளி அடிக ளாரே. (5)

என்பது இத்திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல்.

நனி பள்ளி ஈசனிடம் விடைபெற்றுக்கொண்டு திருவலம் புரம் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இத்தலத்து இறைவனை இரண்டு பதிகங்களால் வழிபடுகின்றார். “தெண்டிரை தேங்கி (4.55) என்ற திருநேரிசைச் செந் தமிழ்ப்பதிகத்தில்,

தேனுடை மலர்கள் கொண்டு

திருந்தடி பொருந்தச் சாத்தி ஆனிடை அஞ்சுங் கொண்டு - அன்பினால் அமர ஆட்டி

வானிடை மதியம் சூடும்

வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்றேன்

கல்வினைப் பயனுற் றேனே. (3)

என்பது முன்றாவது வாடா நறுமலர். இதனையடுத்து “மண்ணளந்த (6.58) என்ற திருத்தாண்டகச் செந்தமிழ்

தாயார் பிறந்த ஊர். சம்பந்தர் தம் தந்தையின் இடுப்பில் தாங்கப்பெற்றுத் தம் மேல் ஆணை வைத்துப் பாடிய தலப் பதிகம் சிறப்புடையது.

9. வலம்புரம் (பெரும் பள்ளம்): சீகாழியிலிருந்து 8 கல் தொலைவிலுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/125&oldid=634115" இலிருந்து மீள்விக்கப்பட்டது