பக்கம்:நாவுக்கரசர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 87

சேவிக்க வேண்டும் என்ற பெருவேட்கையால் உந்தப் பெற்று முதலில் செம்பொன் பள்ளி13 யிலுள்ள திருக்கோயி லுக்கு வருகின்றார். ஊனினுள்ளுயிரை வாட்டி’ (4.29) என்ற முதற் குறிப்பையுடைய திருப்பதிகம் பாடி இறைவனைச் சேவிக்கின்றார். -

கொய்யவர் விழுமி யாரும்

நூலினுள் நெறியைக் காட்டும் மெய்யவர் பொய்யு மில்லார்

உடலெனும் இடிஞ்சில் தன்னில் நெய்யமர் திரியு மாகி

நெஞ்சத்துள் விளக்கு மாகிச் செய்யவர் கரிய கண்டர்

திருச்செம்பொன் பள்ளி யாரே. (2)

என்பது இந்த நேரிசைப் பதிகத்தின் இரண்டாவது பாடல். “கானறாதகடி” (5.39) என்ற முதற்குறிப்புடைய திருக் குறுந்தொகைப் பதிகத்தாலும் இத்தலத்துப் பெருமானை ஏத்துகின்றார்.

பூவு லாஞ்சடை மேற்புனல் சூடினான் ஏவ லால்எயில் மூன்றும் எரித்தவன் தேவர் சென்றிறைஞ்சும் செம்பொன் பள்ளியான் மூவரரய்முதலாய்கின்ற மூர்த்தியே. (5) என்பது இத்திருப்பதிகத்தின் ஐந்தாவது பாடல்.

செம்பொன் பள்ளியானிடம் விடைபெற்றுக் கொண்டு மயிலாடுதுறை14 வருகின்றார். கொள்ளும் காதன்மை”

13. செம்பொன்பள்ளி: மயிலாடுதுறை - தரங்கம்பாடி இருப்பூர்தி வழியிலுள்ள செம்பொனார் கோயில்நிலையம். ஊருக்குள் திருக்கோயில் உள்ளது.

14. மயிலாடுதுறை (மாயூரம்):புகழ்பெற்ற இருப்பூர்திச் சந்திப்பு. நில்ைத்திலிருந்து 2 கல் தொலைவிலுள்ளது திருக்கோயில். நிலையத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/130&oldid=634121" இலிருந்து மீள்விக்கப்பட்டது