பக்கம்:நாவுக்கரசர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நாவுக்கரசர்

(5.39) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ் மாலை பாடி இறைவனை ஏத்துகின்றார்.

கிலைமை சொல்லுநெஞ் சேதவம் என்செய்தாய் கலைக ளாயவல் லான்கயி லாயகன் மலையன் மாமயி லாடுதுறை யன்கம் - தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே. (6) என்பது இத்திருப்பதிகத்தின் ஆறாவது பாடல்.

மயிலாடுதுறை வெள்ளந்தாங்கு சடையனிடம் விடை பெற்றுக்கொண்டு திருத்துருத்தி வருகின்றார் திருநாவுக் கரசர். ‘பொருந்திய குரம்பை தன்னை’ (4.42) என்ற முதற் குறிப்புடைய திருநேரிசைத் திருப்பதிகம் பாடித் துரமனத் துருத்தியானை ஏத்துகின்றார்.

உன்னிஎப் போதும் நெஞ்சுள்

ஒருவனை ஏத்து மின்னோ கன்னியை ஒருபால் வைத்துக்

கங்கையைச் சடையுள் வைத்துப் பொன்னியின் நடுவு தன்னுட்

பூம்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானைத் - தொண்டனேன் கண்ட வாறே. (3)

என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல்.

உமாதேவியார் மயில் உருவில் இறைவனை வழிபட்ட தலம். காவிரியாற்றின் தென்கரையிலுள்ளது. ஐப்பசித் துலா முழுக்குச் சிறப்புடையது. ஐப்பசிக் கடைசி நாளன்று கடைமுழுக்கு மிகச் சிறப்புடையது. கார்த்திகை முதல் தேதியன்று முடவன் முழுக்கு. .

15 துருத்தி : மாயூரம் - திருச்சி இருப்பூர்தி வழியி லுள்ள குத்தால நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. இறைவன் கட்டள்ைப்படி இங்குள்ள குளத்தில் மூழ்கிய வன்றொண்டர் தமது உடலுறு பிணி நீங்கி.மணி ஒளி சேர் திருமேனியுடையவர் ஆயினார், --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/131&oldid=634122" இலிருந்து மீள்விக்கப்பட்டது