பக்கம்:நாவுக்கரசர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 89

ஒவ்வொரு பாடலும் தொண்டனேன் கண்டவாற்ே’ என்ற தொடரால் இறுகின்றது. -

துருத்தியானிடம் விடை பெற்றுக்கொண்டு வேள்விக் குடி 18 வருகின்றார் நாவேந்தர். வேள்விக்குடிப் பெரு மானைச் சேவித்து (பதிகம் இல்லை) எதிர்கொள்பாடி1 என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். வந்தவர் தலத்து எம்பெருமானை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை).

எதிர்கொள்பாடிப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு மணஞ்சேரி என்ற திருத்தலத்திற்கு வருகின் றார் வாகீசப்பெருமான். பட்ட நெற்றியார் (5.87) என்ற முதற் குறிப்பையுடைய திருக் குறுந்தொகைச் செந்தமிழ் மாலையால் வழிபடுகின்றார்.

துள்ளு மான்மறி தூமழு வாளினர் வெள்ள நீர்க்கரங் தார்சடை மேலவர் அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே. (5) என்பது ஐந்தாவது பாடல் திருமணஞ்சேரி இறைவன் துள்ளும் மான்மறி, மழுவாள் இவற்றைத் தரித்தவர். 16. வேள்விக்குடி : குத்தாலம் இருப்பூர்தி நிலையத்தி லிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர், சுந்தரர் என்ற இரு குரவர்களின் பாடல் பெற்றது.

17. எதிர்கொள்பாடி (மேலைத் திருமணஞ்சேரி) குத்தாலத்திலிருந்து 3; க்ல் தொலைவிலுள்ளது. சுந்தர மூர்த்தியின் பாடலை மட்டிலும் பெற்றது. - 18. மணஞ்சேரி (கீழைத் திருமணஞ்சேரி): குத்தாலம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3 கல் தொலைவு. வேள்விக் குடி, எதிர்கொள்பாடி இத்தலங்களை ஒட்டிய தலம். மயி லாடு துறை, திருத்துருத்தி இவற்றை வணங்கிவிட்டு ஆவடு தண்துறை சென்றபோது பாடிய திருத்தலம் என்று தரும புரப் பதிப்பு இதற்குக் குறிப்பெழுதும். பொதுவாக ஆவடு துறைப் பயண்ம், திருவானைக்கிா நோக்கிய பயணங்களின் போது இச்சோழ நாட்டுத் தலங்கள் பாடப்பெற்றுள் ளமையை உய்த்துணர வேண்டியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/132&oldid=634123" இலிருந்து மீள்விக்கப்பட்டது