பக்கம்:நாவுக்கரசர்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நாவுக்கரசர்

கங்கையைச் சடையில் கொண்டவர். இவரை வாழ்த்துதலே வாழ்வாகும் என்கின்றார். மணஞ்சேரி மருந்தி னிடம் விடைபெற்றுக்கொண்டு பந்தனை கல்லூர் வருகின்றார். நோதங்கமில்லாதார்” (6.10) என்ற முதற் குறிப்பினை யுடைய செந்தமிழ்த் திருத்தாண்டக மாலையால் வழிபடு கின்றார்.

பூதப் படையுடையார் பொங்கு நூலார்

புலித்தோ லுடையினார் போரேற் றினார் வேதத் தொழிலார் விரும்ப நின்றார்

விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி குடி ஓதத் தொலிகடல்வாய் கஞ்ச முண்டார்

உம்பரோ டம்பொன் னுலக மாண்டு பாதத் தொடுகழலார் பைங்கண் ஏற்றார்

பலியேற்றார் பந்தணை கல்லு ராரே. (3)

என்பது மூன்றாவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர். இதில் பந்தணை நல்லூர் பெருமான் பூதப் படையினர்; வேதத் தொழிலர்; புலித் தோலுடையினர்; காளை வாகனத்தர்; விரிசடைமேல் வெண் திங்கள் கண்ணி சூடியவர்; நஞ்சுண்ட கண்டத்தார் ; விண்ணுலகம் அவரது உடைமை’ என்கின்றார்.

பந்தணை நல்லூர்ப் பரமனிடம் விடைபெற்றுக் கொண்டு அன்னியூர்20 வருகின்றார் ஆளுடைய அரசு. “பாறலைத்த (5.8) என்ற முதற் குறிப்பினையுடைய திருக் குறுந்தொகைப் பதிகத்தால் இவ்வூர் இறைவனை வழிபடு Slgir som ri.

19. பந்தணைநல்லூர் : குத்தாலம்_இருப்பூர்தி நிலை யத்திலிருந்து 6 கல் தொலைவு. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு, -

20. அன்னியூர் (பொன்னுரர்) நீடூரிலிருந்து 3 கல் தொலைவு. காவிரியின் வடகரையிலுள்ள தலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/133&oldid=634124" இலிருந்து மீள்விக்கப்பட்டது