பக்கம்:நாவுக்கரசர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 91

பரவி நாளும் பணிந்தவர் தம்வினை துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம் குரவம் காறும் குழலுமை கூறராய் அரவ மாட்டுவர் போல் அன்னி யூரரே. (3)

என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல்.

அன்னியூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு கடம்பூர் வருகின்றார் அப்பர் பெருமான். இரண்டு திருக் குறுந் தொகைச் செந்தமிழ் மாலைகள் பாடி வழிபடு கின்றார் இத்தலத் திறைவனை. தளருங்கோளரவம் (5.19) என்றது முதற்பதிகம். இதில்,

துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே! பண்ணி னால்முனம் பாடல துசெய்தே எண்ணி லார்எயில் மூன்றும் எரித்தமுக் கண்ணி னான் கடம் பூர்க்கரக் கோயிலே. (4)

என்பது நான்காம் பாடல். மற்றொரு பாடல்,

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன் க டன்னடி யேனையும் தாங்குதல் என்க. டன்பணி செய்து கிடப்பதே. (9)

21. கடம்பூர் : சிதம்பரத்திலிருந்து 15 கல் தொலைவு, நாதமுனிகள் திருத்தொண்டு புரிந்த காட்டுமன்னார் குடியி லிருந்து 3 கல் தொலைவு. ஆலயம் கரக் கோயில். இரதம், சக்கரம், குதிரையமைந்துள்ள சிற்ப முறையில் கருவறை அமைந்துள்ளது. காவிரியின் வடகரைத்தலம். சம்பந்த ருடன் திருக்கோலக்கா வழிபட்ட பின், நாவுக்கரசர் பல தலங்களை வழிபட்டார். அவற்றுள் ஒன்று இது (தருமபுரப் பதிப்பு). கோயிலின் அமைப்பு அற்புதமாகப் பாடப்பெற் றுள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/134&oldid=634125" இலிருந்து மீள்விக்கப்பட்டது