பக்கம்:நாவுக்கரசர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நாவுக்கரசர்

என்பது. இஃது ஒன்பதாம் பாடல்: புகழ் வாய்ந்த பாடல். அப்பர் பெருமானின் குறிக்கோளை நூற்பாபோல் விளக்கு வது. இத் திருக்குறுந்தொகையில் இறைவன் கடமையை யும் தம் நிலையையும் தெளிவுபடுத்துகின்றார்.இறைவனின் கடன் அடியார்களைத் தாங்குதல்; அடியாரின் பொறுப்பு பணிசெய்து கிடத்தல். இன்று நடைபெறுவது மக்களாட்சி. மக்களே இறை நிலையிலுள்ளனர். அனைத்து அரசு நிறு வனங்களிலும் பணியாற்றுவோருக்கு மக்கள்தாம் தேர்ந் தெடுத்த மன்றங்கள்மூலம் நிதி ஒதுக்கிப் படி அளக்கின்ற னர். நல்ல ஊதியம் பெறுகின்றனர் அரசுப் பணியாளர்கள் (Public servants). தாம் சமூகப் பணியாளர் என்ற உணர்ச்சி யுடன் பணியாற்றவேண்டும். எக்காரணத்தாலும் ஆணவம் மிகுந்து தாம் தலைவன் (Master) என்ற எண்ணமே அவர்க ளிடம் எழக்கூடாது. அலுவலகத்திற்குத் தேவையைக் கோரி வரும் ஒர் ஏழையிடம்கூட மரியாதையுடன் நடந்து உதவ வேண்டும். இன்றைய நிலை என்ன? அமைச்சர் முதல் கடையூழியர்வரை எப்படி நடந்து கொள்கின்றனர்? அப்பர் பெருமானின் மனநிலை . என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற நிலை - அவர்கள் மனத்தில் இருக்க வேண்டும். இருக்குமா? கயிலைநாதன்தான் இவர்களைத் தடுத்து, சில சங்கடங்களை அநுபவிக்குமாறு செய்து, பின் னர் ஆட்கொள்ள வேண்டும். இரண்டாவது பதிகம் ஒரு வராய் இரு’ (5.20) என்ற முதற்குறிப்பினையுடையது.

இல்லக் கோலமும் இந்த இளமையும் அல்லற் கோலம் அறுத்துய வல்லிரே ஒல்லைச் சென்றடை யுங்கடம் பூர்நகர்ச் செல்வக் கோயில் திருக்கரக் கோயிலே. (3)

என்பது மூன்றாவது பாடல். இல்லற வேடங்களைப் போக்கி உய்வதற்குக் கடம்பூர் கரக்கோயிலை விரைவில் சென்று வழிபடுமாறு நம்மை ஆற்றுப்படுத்துகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/135&oldid=634126" இலிருந்து மீள்விக்கப்பட்டது