பக்கம்:நாவுக்கரசர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 93

கடம்பூர்க் குழகனிடம் விடைபெற்றுக்கொண்டு ஓமாம் புலியூர் 22 என்ற தலத்துக்கு வருகின்றார். ஆராரும் மூவிலை வேல் (6.88) என்ற திருத்தாண்டகச் செந்தமிழ் மாலை யால் வழிபடுகின்றார்.

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை

ஆராத இன்னமுதை அடியார் தம்மேல் வருந்துயரம் தவிர்ப்பானை உமையாள் கங்கை

மணவாள நம்பியைஎன் மருந்து தன்னைப் பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்

பொழில்கெழுவு தருமோமாம் புலியூர் நாளுங் திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்

சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. (6)

என்பது ஆறாம் நறுமல்ர். இதில் ஒமாம்பூரின் வடதளிச்’ செல்வன் அருந்தவத்தோரால் வழிபடப் பெறுபவன்; அடியார் துயர் தீர்ப்பவன்; ஆரா அமுதன்; உமையவளின் மணவாள நம்பி; எனக்கு மருந்து’ என்கின்றார்.

வடதளிச் செல்வனிடம் விடை பெற்றுக்கொண்டு ஆப்பாடிக்கு வருகின்றார். கடலகம் ஏழினோடு (4.48) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் திருநேரிசைப் பதிகத் தால் வழிபடுகின்றார்.

22. ஒமாம்புலியூர்: குத்தாலம் இருப்பூர்தி நிலையத் திலிருந்து 11 கல் தொலைவு (கொள்ளிடத்தைக் கடக்க வேண்டும்). சிதம்பரத்திற்குத் தென்மேற்கில் 15 கல் தொலைவு. காட்டுமன்னார் குடியிலிருந்து பேருந்து மூலம் செல்லலாம். * ..

23. ஆப்பாடி : ஆடுதுறை என்ற இருப்பூர்தி நிலை யத்திலிருத்து 7 க்ல் தொலைவு. சண்டேசுவர நாயனார் (அறுபத்து மூவருள் ஒருவர்) பூசித்த தலம். இதைப் (4.48:4) பாசுரம் கூறும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/136&oldid=634127" இலிருந்து மீள்விக்கப்பட்டது