பக்கம்:நாவுக்கரசர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 நாவுக்கரச்ர்

அண்டமார் அமரர் கோமான்

ஆதிஎம் அண்ணல் பாதம் கொண்டவன் குறிப்பி னாலே

கூப்பினான் தாப ரத்தைக் கண்டவன் தாதை பாய்வான்

காலற எறியக் கண்டு தண்டியார்க் கருள்கள் செய்த

தலைவர்ஆப் பாடி யாரே. (4) என்பது நான்காவது தமிழ் மணம் கமழும் வாடா நறுமலர், ஆப்பாடி அடிகளிடம் விடைபெற்றுக் கொண்டு ஆளுடைய அரசு மங்கலக்குடிக்கு* எழுந்தருளுகின்றார். தங்கலப்பிய (5.73) என்ற முதற் குறிப்புடைய திருக்குறுந் தொகைப் பதிகத்தால் வழிபடுகின்றார். இதில்,

மன்னு சீர்மங்க லக்குடி மன்னிய பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர் உன்னு வாரும் உரைக்கவல் லார்களும் துன்னு வார்கன் னெறிதொடர் வெய்தவே. (6) என்பது ஆறாம் பாடல். இதில் மங்கலக் குடியில் திகழும் செஞ்சடையான் திருநாமங்களை நினைப்பவர்களும் சொல்லித் துதிப்பவர்களும் சிவஞானமாகிய நன்னெறித் தொடர்பினை அடைவர் என்கின்றார்.

மங்கலக்குடி மாமதி சூடிய சோதியிடம் விடைபெற்றுக் கொண்டு கஞ்சனூர்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார்.

24. மங்கலக்குடி (சூரியனார் கோயில்) : ஆடுதுறை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. சூரியன் திரும்ால், பிரமன், காளி, அகத்திய முனிவர் பூசித்த தலம். (பாடல்-3) இது காவிரியின வடகரைத் தலம். இப்பதிக 4.ஆம் பாடலில் சண்டேசுவரரின் வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது. -

25. கஞ்சனூர் : நாரசிங்கம் பேட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. கஞ்சன் (=பிரம்ன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/137&oldid=634128" இலிருந்து மீள்விக்கப்பட்டது